Thursday, November 10, 2005

Tiruvalampozhil - II

Reposting with corrections thanks to Padmasani


ஆலம்பொழிலினிலே ஆத்தோர சோலையிலே
மாலைப் பொழுதினிலே மனசெல்லாம் மயங்கையிலே
பாலோடு தேன் போலே பக்கத்தில் நீயிருக்க
காலம் மறக்குதடி கள்ளெல்லாம் ஊறுதடி


வானஞ் சிவக்குதடி வயக்காடு சிரிக்குதடி
சாணம் போட்ட மாடு ஒன்னு சந்தினிலே சுத்துதடி
கானம் ஒண்ணு நான் பாட கூத்தொண்ணு நீயாட
ஞானம் பொறக்குமடி நல்லதெல்லம் நடக்குமடி

பொன்னியவ கோயிலிலே பொங்கவச்சு பாட்டெடுத்து
கன்னி நீ கையசச்சா கனவெல்லாம் தோணுதடி
பின்னி இழுக்குதடி பம்பரமா உன் கண்ணு
எண்ணி எண்ணி என்மனசு ஏங்கித்தான் போகுதடி


வீட்டிலே விளக்கு வச்சு வீதியிலே கோலம் வச்சு
பாட்டிலே மனசு வச்சு பச்சகிளி உன்ன வச்சு
ஏட்டிலெ ழுதாம வச்சு எனக்குள்ள பத்திரமா
பூட்டி புதச்சு வச்சா பூபூவா பூக்குதடி


மாட்டு வண்டியில மயிலு நீ வாரையிலே
ரோட்டில தான் என் மனசு ராட்டினமா சுத்துதடி
காட்டுக் களத்தினிலே களையெடுக்க நீ போனா
காத்து வந்து வீசியே உன் கண்டாங்கி மயக்குதடி


மேகம் கருக்குதடி மல்லியப்பூ பூக்குதடி
மோகம் தான் மூளுதடி மாமன் பெத்த மரகதமே
தாகம் எடுக்குதடி தண்ணியூத்த நீ வந்தா
சோகம் குறையுமடி சொகமாத் தான் இருக்குமடி

To be continued