Friday, May 5, 2006

எந்தன் அன்னை

கதிரே எந்தன் அன்னை - ஞானப்
புதிரே எந்தன் அன்னை - அசைவின்
சதிரே எந்தன் அன்னை - எந்தன்
எதிரே எந்தன் அன்னை

ஒளியே எந்தன் அன்னை - விரியும்
வளியே எந்தன் அன்னை - வாழ்வின்
அளியே எந்தன் அன்னை - சாவின்
களியே எந்தன் அன்னை

சுடரே எந்தன் அன்னை - பேரின்பப்
படரே எந்தன் அன்னை - வலிதரும்
இடரே எந்தன் அன்னை - உடலின்
குடரே எந்தன் அன்னை

தழலே எந்தன் அன்னை - பேராசைச்
சுழலே எந்தன் அன்னை - வினையின்
உழலே எந்தன் அன்னை - கருணை
நிழலே எந்தன் அன்னை