Tuesday, April 25, 2006

தேவை

மழை போல் கவிதை
மலர் போல் காதல்

ஒளி போல் பார்வை
வளி போல் எண்ணம்

கொடி போல் வாழ்க்கை
கிளை போல் ஆசை

இருள் போல் உறக்கம்
ம்ருள் போல் கனவு

நதி போல் செல்வம்
மதி போல் கருணை

கதிர் போல் ஞானம்
சுடர் போல் காமம்

கவி போல் கருவம்
கனல் போல் ஆற்றல்

தழல் போல் ஆத்திரம்
நிலம் போல் பொறுமை

வானம் போல் உடல்
கானம் போல் உயிர்

குருவி போல் இன்பம்
கூடு போல் வீடு

அருவி போல் கண்ணீர்
பிரிவு போல் துயரம்

இரவு போல் ஜனனம்
மாலை போல் மரணம்